திருவேடகம் கல்லூரியில் விவேகானந்தர் ஜயந்தி மற்றும் விளையாட்டு விழா

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் விவேகானந்தர் ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது;

Update: 2023-02-12 12:30 GMT

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விவேகானந்தர் ஜெயந்தி விழா.

திருவேடகம்  விவேகானந்த கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகானந்த ஜெயந்தி விழா  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் கூட்டுப் பயிற்சி (Mass Drill) செய்து காண்பித்தனர். மேலும், விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு (March Past), சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக், மால்க்கம், தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு, யோகாசனம், பேண்ட் மியூசிக், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, புதுடெல்லி மற்றும் சென்னை மெரினா கடற்கரையில் நிகழ்ந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கும் மற்றும் யோகாவில் உலக சாதனை செய்த மாணவர்களுக்கும் திருச்சி திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர், சுவாமி நியமானந்த    பரிசுகள் வழங்கி பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.

விவேகானந்த ஜெயந்தி விழா: கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. விவேகானந்த மேனிலைப்பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த அருளுரை வழங்கினார். திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர், சுவாமி நியமானந்த, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த, ஸ்ரீமத் சுவாமி அபேதானந்த, மற்றும் விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கல்லூரியின் முதல்வர் தி.வெங்கடேசன், துணை முதல்வர் கோ.கார்த்திகேயன், முதன்மையர் பு.சஞ்சீவி மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் யு.சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் வ.க.ராமகிருண்னன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சி, ஸ்ரீராமகிருஷ்ண தபோவன கிளை நிறுவன சுவாமிகள் மற்றும் அம்பாக்கள், பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தபோவனத்தைச் சார்ந்த கிளை நிறுவனங்களின் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் தபோவன அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்52-ஆம் ஆண்டு விளையாட்டு விழா:

திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், 52-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் விவேகானந்த மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் செ.பாலமுருகன் தலைமையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி  நிம்பஸ் அக்ரோ டெய்ரி புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக அலுவலர் மற்றும் இயக்குனர் குமுலோ முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் ஒலிம்பிக் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

விளையாட்டுப் போட்டிகளைத் சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கயிறு இழுத்தல் போட்டியிலும், விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் லக்கி கார்னர் போட்டியிலும் பங்கேற்றனர்.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு  விழா, கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி வாழ்த்துப்பாடலுடன் இனிதே தொடங்கியது. மாஸ்டர் அனுராஜ் வணிகவியல் முதுநிலை இரண்டாமாண்டு, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  விவேகானந்த கல்லூரி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் நிரேந்தன் மற்றும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் 2022-2023 -ஆம் கல்வியாண்டின் விளையாட்டு ஆண்டு அறிக்கையைப் வாசித்தார்கள்.

விவேகானந்த கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சுத்தானந்த  தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர், சுவாமி நியமானந்த அவர்கள் ஆசியுரை வழங்கினர்.

ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த, ஸ்ரீமத் சுவாமி அபேதானந்த, விவேகானந்த மேனிலைப்பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த மற்றும் விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் சஞ்சீவி மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் பாலமுருகன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விவேகானந்த மேல்நிலைப்பள்ளியின் பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவர் மாஸ்டர் சு.ராகேஷ் நன்றி கூறினார். கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முருகன்  நிகழ்வினை தொகுத்து வழங்கினார், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தபோவனத்தைச் சார்ந்த பல்வேறு அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றார்கள்.

Tags:    

Similar News