தேர்வில் அதிக மதிப்பெண் மாணவர்கள் பெற வேண்டி ,அலங்காநல்லூரில், சிறப்பு யாகம்!
தேர்வில் அதிக மதிப்பெண் மாணவர்கள் பெற வேண்டி ,அலங்காநல்லூரில், சிறப்பு யாகம் நடைபெற்றது.
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10ம்,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம், புஷ்பங்களால் அலங்காரங்கள் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பேனா உள்ளிட்ட எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் ஐயப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர். இத்திருக்கோவிலே, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி தொடர்ந்து சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
யாகத்தின் போது, சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் பாதத்தில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட பேனாக்கில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது .இதே போல, மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில் அரசு பொது தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
யாகத்தின் நோக்கம்:
மாணவர்களுக்கு கவனம், ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும்
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்
தேர்வு பதற்றம் குறைய வேண்டும்
யாகத்தின் பலன்:
யாகத்தால் நேரடியாக மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
பதிலாக செய்ய வேண்டியவை:
- திட்டமிட்ட முறையில் படிப்பு
- போதுமான தூக்கம்
- ஆரோக்கியமான உணவு
- மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா
- பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து நம்பிக்கை மற்றும் ஊக்கம்
யாகம் தேவையா?
பொதுத்தேர்வு நெருங்கும் போது, மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அடைவது இயல்பு. இதனை சமாளிக்க, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். அதில் ஒன்றாக, கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்துவது.
முடிவுரை:
யாகம் நடத்துவது தவறல்ல. ஆனால், அதை மட்டுமே நம்பி இருக்காமல், மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் ஊக்கத்தை அளிக்க வேண்டும்.