சோழவந்தான் அருகே சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்: எம்எல்ஏ தொடக்கம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது;

Update: 2023-06-25 11:00 GMT

சோழவந்தான் அருகே அயப்பன் நாயக்கன்பட்டியில், தமிழ்நாடு அரசின் பொது மருத்துவ முகாமை, தொடக்கி வைத்த வெங்கடேசன் எம்எல்ஏ 

தொடங்கி வைத்தார்:

அயப்பன் நாயக்கன்பட்டியில், தமிழ்நாடு அரசின் பொது மருத்துவ முகாமை, வெங்கடேசன் எம்எல்ஏ .தொடங்கி வைத்தார்:

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு,ஊராட்சி மன்றத் தலைவர் பவுன்முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன்,ரேகாவீரபாண்டி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பாக்கியம்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, வாடிப்பட்டி வட்டாரவளர்ச்சி அலுவலர் கதிரவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் வரவேற்றார்.சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை துணைஆட்சியர் சுரேஷ்குமார், சோழவந்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன்,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன்,

மாவட்டத்துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் திட்டம் குறித்து பேசினார்கள்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் நன்றி கூறினார்.கச்சகட்டி மற்றும் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்,சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 200 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்,இவர்களுடன் கீர்த்தி மருத்துவமனை,ஹர்சித்தா மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினரும் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

கண் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. இதில், சுமார் 2000 பேர் பயன் பெற்றனர் இதில், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மன்னாடிமங்கலம் ஊராட்சி சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள்,தூய்மை பணி பணியாளர்கள், மக்களைத் தேடி வரும் மருத்துவம் பணியாளர்கள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு பணியாற்றினார்கள். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News