சோழவந்தான் அருகே ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்..!

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-06-20 10:22 GMT

சோழவந்தான் அருகே மரியாதையுடன், கொண்டு செல்லப்பட்டன ராணுவ வீரர் சடலம்.

சோழவந்தான்:  மதுரை, சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி -முத்துலட்சுமி தம்பதியின்  மகன் நாகரத்தினம் வயது 28 .இவர் இந்திய ராணுவத்தில் நாக்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த நாகரத்தினம் நேற்று முன்தினம் அங்கு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் இன்று காலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அவரது சொந்த ஊரான முள்ளிப்பள்ளத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உடன், ராணுவ வீரர்கள் வந்திருந்தனர். முள்ளிபள்ளம் பவர் பள்ளி அருகே உள்ள அவரது வீட்டில் சிறிது நேரம் உடல் வைக்கப்பட்ட நிலையில் கிராமத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் மரியாதை செய்தனர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக முள்ளிப்பள்ளம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட து. இறுதி ஊர்வலத்தில் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள் ராஜா, ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், மற்றும் அப்துல் கலாம் அறிவியல் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறந்த ராணுவ வீரர் நாகரத்தினத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News