சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டம்
சோழவந்தான் பேரூராட்சியில் புகையில்லா போகி கொண்டாட்டப்பட்டது.;
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழர் திருநாளை முன்னிட்டு, தை திருநாளுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் .
இதன்படி, வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் உடைந்து போன மர சாமான்கள் போன்றவற்றை போகிப் பண்டிகை என்று தீயிட்டு கொளுத்தாமல், பேரூராட்சி வாகனங்களில் பேரூராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவுகள் சேகரிப்பு மையங்களிலும் கழிவுகளை கொடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் ஒலிபெருக்கி மூலம் கழிவுகளை ஒப்படைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும்,சுற்றுச்சூழலை பாதுகாக்க சோழவந்தான் பேரூராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறது. இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார், சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுய உதவி குழுக்கள் பேரூராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர் .
இந்நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் மலைச்சாமி ,டெங்கு பணியாளர் தங்கப்பாண்டி உட்பட பலர்கலந்து கொண்டனர்.