சிலம்பாட்டப் போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் சிலம்பாட்டம் போட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-07-01 09:37 GMT

சிலம்பாட்டப் போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரையில் நடந்தது.

தினசரி அன்னதானம் வழங்கி வருகிற ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக, மதுரை அண்ணா மெயின் வீதியில் அமைந்துள்ள ராயல் பப்ளிக் ஸ்கூலில், முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சிலம்பாட்டா போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவினை, டிரஸ்ட் சார்பாக சோலை பரமன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில், மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட சீனியர், சப் ஜூனியர், ஆண், பெண் இருபாலரும் போட்டியில் கலந்து கொண்டார்கள். டாக்டர் முரளி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில சிலம்பாட்டகழக த்தலைவரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத் தலைவருமான வலசை முத்துராமன் , சிறப்பு விருந்துநகராக கலந்து கொண்டு, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.

அப்போது, பத்திரிக்கை நிருபருக்கு அளித்த பேட்டியில், சிலம்பம் ஆனது தமிழ் மண்ணோட கலை என்றும் அப்படிப்பட்ட சிலம்ப கலை சில பேர் தன்னுடையசுய நலத்துக்காகவும், சிலர் கமர்சியல் ஆகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து, இதை காக்க வேண்டும் என்றும் மற்ற நாட்டுனுடைய கலைகள் எல்லாம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

நம் தமிழ் மண்ணுடைய கலையான சிலம்பம் ஆனது தமிழ்நாட்டில் வளர்வதற்கு சிலர் தடை உள்ளார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில், சீருடை பணியாளர்கள் தேர்வில்வேலைவாய்ப்பு தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், 10% இடம் ஒதுக்கியதற்கு என்னுடைய சார்பாகவும் ஆசான்கள் சார்பாகவும் சிலம்பம்பயின்று வரும் லட்சக்கணக்கான ஏழை குழந்தைகளின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும், தமிழக முதல்வர் அனைத்து பள்ளிகளிலும் உடற்பயிற்சி ஆசிரியர் இருப்பது போல், சிலம்பத்திற்கும் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப ஆசான்களை நியமித்து, அனைத்துஏழை குழந்தைகளும் சிலம்பம் பயிலுமாறு செய்தால்,பல லட்சம் ஏழை குடும்பங்கள் வாழ்த்தும் ,

வசதி படைத்தவர்களுக்கு, தமிழ்நாட்டில் பல விளையாட்டுகள் உள்ளன. சிலம்பம் அன்றாடம்கூலி வேலை செய்பவர்கள் பிள்ளைகளுக்கு,சிலம்பம்பயிலவசதியாக இருக்கும். வெகு விரைவில், தமிழகத்தில் உள்ள அனைத்து சிலம்ப ஆசான்களையும் அழைத்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் , சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

இதில், மதுரைமாநில சிலம்பாட்ட கழகம் மாவட்டத் தலைவர் எஸ். கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் கலைமாமணி எஸ்.எம் மணி நன்றி  கூறினார். டிரஸ்ட் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

Similar News