சோழவந்தான் ரயில்வே விரிவாக்கப் பணிக்கு பூமி பூஜை!

சோழவந்தான் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை : வெங்கடேசன் எம். எல். ஏ . தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-07-01 07:00 GMT

சோழவந்தான் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை : வெங்கடேசன் எம். எல். ஏ . தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது .

வெங்கடேசன் எம். எல். ஏ . தலைமையில் நடந்தது. சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன்,முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா முன்னிலை வகித்தனர்.

சுமார் 5 கோடி ரூபாயில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூமி பூஜை நடந்தது. இதில், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் , வார்டு கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News