மதுரை மாவட்ட கோயில்களில் மார்ச் 19-ம் தேதி சிவப்பிரதோஷ விழா

சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்கார மாகி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

Update: 2023-03-18 08:00 GMT

மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால் விநாயகர் ஆலயத்தில், அலங்காரத்தில் துர்க்கை அம்மன்.


மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில் மார்ச். 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில், சிவ பிரதோஷ விழா நடைபெறுகிறது. கோயில்களில், மாதத்தில் வளர்பிறை, மற்றும் தேய்பிறையில், பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ,

மதுரையில் அருகே உள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான அருள்மிகு பிரளயநாத சுவாமி ஆலயத்திலும், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், திருவேடகம் ஏடகநாசுவாமி ஆலயத்திலும், மதுரையில், முத்தீஸ்வரன் இன்மையில் நன்மை தருவார் .மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர் , செல்லூர் திருவாப்புடையார், மதுரை சாத்தமங்கலம் ஆவின் அருள்மிகு பால விநாயகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர், சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர்,திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதோஷ விழா நடைபெறுகிறது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரன் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ,

சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிப்பது வழக்கம். இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ குழுவினர் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அமாவாசை: வருகிற மார்ச். 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசையை முன்னிட்டு, இக் கோயில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்கள் சார்பில், சிறப்பு அபிஷேகமும், அனுமாருக்கு வடைமாலை அணிவித்து, பூஜைகள் நடைபெறும்.

சந்தனக் காப்பு: மதுரை ஆவின், சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், பங்குனி வெள்ளிக்கிழமை/w முன்னிட்டு ,இக்கோயில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

Tags:    

Similar News