திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது;
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்:
மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தர் படிப்பக மையமும் மற்றும் பாரதிய சிந்தனை அரங்கமும் இணைந்து நடத்திய "சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்" நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் கு.இராமர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோரின் ஆசி உரை வழங்கினர்.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கார்த்திகேயன், அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சதீஷ் பாபு, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முதன்மையர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். இளங்கலை மூன்றாமாண்டு தாவரவியல் துறை மாணவர் ரூபன் ஆங்கிலத்திலும் மற்றும் இளங்கலை மூன்றாமாண்டு வரலாற்றுத் துறை மாணவர் இராஜா தமிழிலும் விவேகானந்தரின் சிகாகோ உரை நிகழ்த்தினர்.
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் மற்றும் பாரதி யுவகேந்திராவின் நிறுவனர் நெல்லை பாலு ,சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று, விவேக கவிஞரும் வீரத் துறவியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் வீ.முருகன் நன்றி உரை கூறினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோ.பாலமுருகன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.