திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்’ நடைபெற்றது;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக அன்று காலை 10. மணி முதல் 12. மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்’ நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கண்ணன் இன்றைய நவீன காலத்தில் ஆசிரியரின் பணி என்ற தலைப்பில் பேசுகையில், கல்வி கற்க நல்ல நூல்களை குற்றமற கற்க வேண்டும் அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக வேதியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் சேர்வாரமுத்து நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜோதிபாசு தொகுத்து வழங்கினார்.