வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய பாலாலயம் பூஜை...!

மதுரை அலங்காநல்லூர் அருகே வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலய விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-07-01 11:27 GMT

அலங்காநல்லூர் அருகே ,வடக்கு வாயில் செல்லாயி அம்மன் ஆலய பாலாலயம்  விழா.

மதுரை அலங்காநல்லூர் அருகே வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலய விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் அருகே கல்வேலிப்பட்டி கிராமத்தில் ,அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது பின்பு பூர்ணா கதி நடைபெற்று கோபுர கலசத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கல்வேலிபட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர் கோவில் ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் இளமதி உள்பட பணியாளர்கள் கிராம பெரியோர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


மதுரை அண்ணா நகர் ,தாசில்தார் நகர் சௌபாக்கியம் நகர் ஆலயத்தில்  ,மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பக்தர்களால் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவன், மீனாட்சிக்கு ,பால், மஞ்சள் பொடி ,சந்தனம் போன்ற அபிஷேத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு அர்ச்சனைக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மீனாட்சி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர். 

Tags:    

Similar News