மதுரை அருகே குடியரசு தலைவர் விருது பெறும் பள்ளி ஆசிரியர்
இந்த விருதினை இறைவனுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமர்பிப்பதாகவும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தெரிவித்தார்.;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.
இவர் இப்பள்ளியில், 18 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகவும், என்.சி.சி. ஆசிரியராகவும் பணியை செய்து வருகிறார் .பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவில், கூடைப்பந்து போட்டி, டேக் வாண்டோ, குவாஷ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பரிசுகளை மாணவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு, மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது அறிவித்திருக்கிறது.
இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் கூறியதாவது:மத்திய அரசு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும்,முதல் முறை உடற்கல்வி ஆசிரியருக்கு விருது வழங்கி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த விருதினை இறைவனுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமர்பிப்பதாகவும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் தெரிவித்தார். இவருக்கு சக ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.