சோழவந்தான் அருகே பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் விழா..!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சோழவந்தான் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்குவிழா நடந்தது.;
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சோழவந்தான் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்குவிழா நடந்தது.
சோழவந்தான்:
மதுரை,சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில், உள்ள அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தேவாங்கர் 30 ஊர் அம்பலக்காரர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார் . பள்ளித் தலைமை ஆசிரியை விஜயராணி வரவேற்றார். திருவேடகம்
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் விவேகானந்த கல்லூரி நிர்வாகிகள் சுவாமி பரமானந்தா மகரஜி, சுவாமி அத்யாத்மானந்த மகரஜி ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி ஆசியுரை வழங்கினர். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் விவேகானந்த கல்லூரி சார்பாக மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகளை, இனிப்பும் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகளை இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகள் மகிழ்ச்சியோடு தீபாவளியைகொண்டாட அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டது.