சோழவந்தான் சந்தன மாரியம்மன் ஆலய விழா..!

ஆடி பதினெட்டையொட்டி சோழவந்தான் சந்தன மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.

Update: 2024-08-03 11:36 GMT

சோழவந்தான் சந்தன மாரியம்மன் ஆலய விழா 

சந்தன மாரியம்மன் விழா

சோழவந்தான்.

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. கடைசி வெள்ளி அன்று பால்குடம் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த உள்ளதால், அதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து பக்தர்கள் பெண்கள் பொதுமக்கள் என, ஏராளமானோர் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து,ஆடி வெள்ளியான நேற்று கூழ் காய்ச்சி பொது மக்களுக்கு வழங்கினார்கள். அர்ச்சகர் மருது பாண்டி ஏற்பாடுகளை, செய்திருந்தார். 

ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா...? ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News