சோழவந்தான் அருகே சந்தனக் கூடு திருவிழா

தமிழகத்தில் நெல்லை ஏர்வாடி மற்றும் ராமநாதபுரம் ஏர்வாடி , நாகூர் போன்ற இடங்களில் இந்நிகழ்ச்சி காணப்படுகின்றது

Update: 2023-12-24 09:30 GMT

சோழவந்தான் அருகே தர்ஹாவில் நடைபெற்ற சந்தனக்கூடு  விழா.

திருவாலவாய நல்லூரில் சந்தனக்கூடு விழா

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யிது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷா தர்ஹாவில்  சந்தனகூடு விழா நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம் தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ் அபுதாஹீர் ஜாஹீர் உசேன் ஜிலான் பாஷா ஆகியோர் முன்னிலையில் சந்தனக்கூடுவிழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி கந்தூரி விழா கொடியேற்ற விழா நடந்தது. அன்று முதல் விழா நடந்து வந்தது. நேற்று விழா நிறைவு பெற்றது. சந்தன கூடு பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு காட்டுப்பள்ளிவாசல் சென்று பின்னர் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இங்கு கிராம பொது மக்கள் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் சிறப்பு உதவி ஆய்லாளர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். திருவாலவாயநல்லூர் ஊராட்சி சுகாதாரப் பணியை செய்திருந்தனர். மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர்.

சந்தனக்கூடு..., தமிழகத்தில் நெல்லை ஏர்வாடி மற்றும் ராமநாதபுரம் ஏர்வாடி , நாகூர் போன்ற இடங்களில் இந்நிகழ்ச்சி காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலும், 20ம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதி வரையிலும் சந்தனக் கூடு கட்டும் சம்பிரதாயம் சில முஸ்லிம்களிடத்தே காணப்பட்டது. இது இந்துக்களின் மதப் பாரம்பரியமான 'தேர்' சம்பிரதாயம் மற்றும் கிறித்தவரின் 'சப்பரம்' ஆகியவற்றின் வழித்தோன்றலாகக் கொள்ளலாம்.

'சந்தனக்கூடு' எனும்போது தேர் வடிவிலே அலங்கரிக்கப்பட்ட கலையம்சங்கள் பொருந்திய ஊர்தியை குறிக்கும். ஆரம்பகாலத்திலே மிக உயர்வான முறையில் அலங்கரிக்கப்பட்ட இந்தக சந்தனக்கூடு முஸ்லிம் கிராமங்களில் ஆண்டுக்கொரு தடவை காட்சிப்படுத்தப்படும். குறிப்பாக மலையகப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் கிராமங்களில் இத்தகைய பாரம்பரியங்கள் காணப்பட்டன. இக் கலையில் ஈடுபடுவோர் கூடு கட்டுபவர்கள் என இன்றும் அழைக்கப்படுகின்றனர். கூடு கட்டும் குடும்பம் என்று அழைக்கப்படுவதினூடாக இதுவொரு சில குடும்பங்களுக்குரிய ஒரு கலையாகவும்  கருதப்படுகிறது..

Tags:    

Similar News