அலங்காநல்லூர் அருகே சந்தனக்கூடு திருவிழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நேற்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.;
அலங்காநல்லூர் அருகே மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நேற்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில், உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து இந்த சந்தன கூடு நிகழ்ச்சியில் பங்கேற்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் கூட்டு வழிபாடும் நடைபெறுகிறது. சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடி மரம் எடுத்து வரும் பொழுது அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான மரியாதையும் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்து சமயத்தை சேர்ந்த கிராம நாட்டாமையை அழைத்து அவருக்கு மாலை மரியாதை செய்து சந்தனக்கூடு திருவிழா நிகழ்வில் முக்கியமான கோடி ஊர்வலத்தை தொடங்கி வைப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
மேலும், இந்த கொடி ஊர்வலம் அனைத்து சமுதாய மக்கள் வாழக்கூடிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக செல்லும் பொழுது மேளதாளம் முழங்கி அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி சென்று அனைத்து விதமான பொதுமக்களுக்கும் ஆன்மீக அருளாசி வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிகழ்வுக்கு ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.