சோழவந்தான் அருகே சேறும் சகதியுமாக தார்ச்சாலை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சோழவந்தான் அருகே சேறும் சகதியுமாக தார்ச்சாலை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் கேள்வி
மோசமான நிலையில் தச்சம்பத்து நெடுங்குளம் சாலை வாகன ஓட்டிகள் அவதி.
மதுரை அருகே,சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் .
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்காக தோன்டிய பள்ளங்களை முறையாக மூடாமல் சாலை ஓரங்களில் போட்டு விட்டு சென்றதாலும் தற்போது, பெய்து வரும் தொடர் மழை காரணமாக மண் மேடுகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்வதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சேரும் சகதியமாக உள்ள இடங்களில் கீழே விழக்கூடிய நிலையில் மாற்று பாதையான சோழவந்தான் சென்று திருமால்நத்தம் ரிசபம் வழியாக நெடுங்குளம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தச்சம்பத்து முதல் நெடுங்குளம் வரை உள்ள சாலையை சரி செய்து பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.