சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள விரிசலை சரி செய்ய கோரிக்கை
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள விரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ,கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு மேம்பாலத்தின் நடுவே மூன்று இடங்களில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் செல்லும் போது விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரிசலை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் பல்வேறு குறைபாடுகள் இருந்து வரும் நிலையில் தற்போது மேம்பாலத்தின் நடுவில் விரிசல் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தினர் உடனடியாக மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.