திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் மண்டல அளவிலான பூப்பந்தட்ட போட்டி
மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் விவேகானந்த கல்லூரி அணிகள் கலந்து கொண்டன;
மதுரை அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம் பி,மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டி நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தொடக்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி மற்றும் முதன்மையர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரியின் உடற்பயிற்சி பேராசிரியர் மற்றும் இயக்குனர் முனைவர் சீனிமுருகன் மற்றும் கல்லூரியின் யோகா மாஸ்டர் இருளப்பன் விளையாட்டுப் போட்டியினை ஒருங்கிணைத்தனர்.
அணி மேலாளர்களாக மதுரை கல்லூரியின் டாக்டர் கதிர்வேல் பாண்டியன் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் விவேகானந்த கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம் பி-க்கு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.