மதுரை பகுதி கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Update: 2022-03-20 05:00 GMT

மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா

மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான சிவன் ஆலயத்தில்இம்மாதம் 21-ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ராகு- கேது பெயர்ச்சி விழா ஹோமம் நடைபெறுகிறது.

ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து- மேஷ ராசிக்கும், கேது பகவான்- விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி, இக் கோயிலில்,ஆம் மாதம் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு ராகு-கேது ப்ரீதி ஹோமமும், அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.பரிகார ராசிகளான, மேஷம் , ரிஷபம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை, ஆலய தக்கார் இளமதி, தொழிலதிபர் எம். மணி, பள்ளித் தாளர், பேரூராட்சி உறுப்பினர் டாக்டர் எம். மருதுபாண்டியன், கணக்கர் சி. பூபதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இதேபோல்,. மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால் விநாயகர் ஆலயத்திலும்,ஆம் மாதம் 21-ம் தேதி மாலை 4, மணிக்கு ராகு கேது ப்ரீதி ஹோமங்கள் ஈஸ்வர பட்டர் தலைமையில் நடைபெறுகிறது.


Tags:    

Similar News