மதுரை அருகே சோழவந்தான் சிவன் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகம்
விசாக நட்சத்திரத்திற்கு ராகு ஸ்தலமான சோழவந்தான்பிரளயநாத சுவாமி(சிவன்) கோவில்.ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது;
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா
நவக்கிரகங்களில் தங்களுக்கென்று தனியான இருப்பிடம் கொண்ட ராகு கேது. ஒன்றை வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதுபோல் நேற்று மாலை 3:40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ச்சியானார். இதையொட்டி விசாக நட்சத்திரத்திற்கு ராகு ஸ்தலமான சோழவந்தான் வைகை கரையில் உள்ள மிகவும் பிரசித்த பெற்ற பிரளயநாத சுவாமி(சிவன்) கோவில்.ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
தொழில் அதிபர் எம்.வி.எம். மணிமுத்தையா தலைமையில் கவுன்சிலர் வள்ளிமயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. சிறப்பு ஹோமங்களை வரதராஜப்பண்டிட் தலைமையில் காசி விஸ்வநாதன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மகா பூர்ணஹுதி நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து ராகு கேதுக்கு பால் தயிர் உட்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று புனித நீரால் மகா அபிஷேகம் நடந்து அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர் பின்னர், எம்.வி.எம். குழுமத்தினர் அன்னதானம் வழங்கினர். மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
.