சோழவந்தானில் புரட்டாசி சனி வார சிறப்பு பஜனை

சோழவந்தானில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பாண்டுரங்கன் பக்த சபா சார்பில் ஆன்மீக வீதி உலா நடைபெற்றது

Update: 2022-09-24 09:00 GMT

சோழவந்தானில் பாண்டுரங்கன் பக்த சபா சார்பில்  நடைபெற்ற ஆன்மீக வீதி உலா

சோழவந்தானில் பாண்டுரங்கன் பக்த சபா சார்பில் ஆன்மீக வீதி உலா பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ரவுத்து நாயக்கர் தெரு பஜனைமடம் நவநீதகிருஷ்ணானந்த பஜனை பாண்டுரங்கன் பக்த சபா புரட்டாசி முதல் வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு, சோழவந்தான் நான்கு ரத வீதிகளிலும் பஜனை பாடல் பாடி பக்திபரவசமாக நான்குரத வீதிகளிலும் ஆன்மீக மெய்யண்பர்கள் ஊர்வலமாக வந்தார்கள்.அப்போது, பொதுமக்கள் அரிசி பருப்புகள் உள்ளிட்ட பொருட்களை அன்னதானமாக வழங்கினார்கள் .பின்பு ,பொதுமக்கள் அனைவரும் ஆன்மீக பெரியவர்களிடம் ஆசி பெற்றார்கள் . ஏற்பாடுகளை, சோ.பூங்காவனம் பாகவதர், தலைமையில் பாண்டுரங்கன் பஜனை மடம் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News