வாடிப்பட்டி அருகே, தனிச்சியத்தில் சுரங்க பாதை அமைக்க பொது மக்கள் கோரிக்கை

வாடிப்பட்டி அருகே, தனிச்சியத்தில் சுரங்க பாதை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-05 10:02 GMT

வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் சுரங்கப்பாத அமைக்க கோரி மறியல் செய்ய வந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாடிப்பட்டி அருகே, தனிச்சியம் பகுதியில் சுரங்க பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, அலங்காநல்லூர் செல்லும் பிரதான சாலையில், தனுச்சியம் பிரிவு பகுதியில் மேம்பாலப் பணிகள் அமைப் பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் மூலம், அருகில் உள்ள தனிச்சியம் கிராமப்பகுதிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும் எனவும் ஆகையால், அந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், நெடுஞ்சாலை துறை சார்பில் உரிய பதில் அளிக்காததால், இன்று காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மறியல் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்து வாடிப்பட்டி காவல் துறையினர், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனிச்சியம் கிராமத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் இது குறித்து முடிவெடுத்து உரிய பதில் அளிப்பதாகவும் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் , தற்காலிகமாக மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி கூறும் போது வாடிப்பட்டி அருகே, தனிச்சியம் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பணிகள் தனிச்சியம் கிராமத்தை தாண்டி செல்வதால், எங்கள் கிராமம் இரண்டு பகுதிகளாக பிரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பொதுமக்கள் செல்வது நிரந்தரமாக தடைபடக் கூடிய நிலை உள்ளதால், எங்கள் கிராமத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனு கொடுத்து இருந்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால், இன்று காலை கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒரு வாரத்தில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உள்ளோம் . ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்கள் சுமார் 5000 பேருக்கு மேல் திரண்டு தேசிய நெடுஞ் சாலையில், மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News