சோழவந்தான் அருகே பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
ஒன்றியச்செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்து 71 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்;
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றியச்செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்து ,71 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, ஒன்றியக்கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, தொண்டரணி அமைப்பாளர்முள்ளைரமேஷ், முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.