சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா பிறந்தநாள் விழா
சோழவந்தானில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வட்டாரத் தலைவர்கள் குருநாதன், சுப்புராயலு, பழனிவேல் முன்னிலையில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லப்பா சரவணன் இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் மாணிக்க மூர்த்தி, பரமசிவம், ரவி, மலையரசன், சுந்தரம், பக்கீர் முகமது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.