சோழவந்தான் அருகேயுள்ள பள்ளி மாணவர் களுக்கு பிரதமர் கடிதம்
சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதங்கள் அனுப்பி உள்ளார்;
மதுரை அருகே சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதங்கள் அனுப்பி உள்ளார்.
இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில், சுதந்திரத்தின் அமிர்த காலத்தில், அடுத்து வரும் 25 ஆண்டு காலத்தில், நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கி நகர்கிறோம். இந்த அருமையான காலகட்டத்தை, நாம் வரலாற்றில் பொறிக்கச் செய்வோம். இதை நிறைவேற்ற, பஞ்ச பிராண் என்னும் "ஐந்து உயிர் மூச்சான கொள்கைகளை கையெடுப்போம்..
இந்த ஐந்து உயிர் மூச்சான கொள்கைகளும்” நமது இந்தியாவை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும். "பரிக்சா பே சர்ச்சா” எனும் ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தியாவிற்காக எனும் முக தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார். பிரதமரிடம் கடிதம் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.