சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா: கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது;
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்
சோழவந்தான் பிரளயனாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. கொட்டும் மழையில் பிரதோஷ விழா நடைபெற்றது இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால்,தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷ விழா நடைபெற்ற போது தொடர்ந்து மழை பெய்ததால் பெண்கள் மற்றும் பக்தர்கள் மழையில் நனைந்தவாறு சாமி தரிசனம் செய்தனர்
பிரதோஷ காலகட்டத்தில் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது பக்தர்களை ஆசீர்வதிப்பதாகவும், பிரதோஷ காலத்தில் அல்லது திரயோதசி நாளில் அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. சிவ பக்தர்கள் முக்தி அடையவும், தங்கள் கனவுகளை நிறைவேற்றவும் பிரதோஷ விரதம் மேற்கொள்கின்றனர்.பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர் மனநிறைவு, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார் என்று கூறப்படுகிறது.
பிரதோஷ விரத நேரத்தில், 'ஓம் நம சிவாய மந்திரம்' என்று 108 முறை உச்சரிப்பதால், பல நலன்களும் நன்மைகளும் கிடைக்கும் என்று கூறுகிறது.பிரதோஷ விரதம் மிகவும் மங்களகரமானது, அதை முழு பக்தியுடனும் பக்தியுடனும் பின்பற்றினால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.