சோழவந்தான் பகுதி கோயில்களில் பிரதோஷ விழா
சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரளயநாத சிவன் கோவிலில், பிரதோஷ விழா நடைபெற்றது;
சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரள்யநாத சிவன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவபெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி ரிஷப வாகனத்தில் அழைத்துவரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஏற்பாடுகளை, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் எம். மணி முத்தையா, பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளிமயில் குடும்பத்தினர் செய்திருந்தனர். பிரதோஷவிழாவில், சோழவந்தான் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.