சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் பிரதோஷ விழா

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.;

Update: 2022-06-13 09:55 GMT

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் பிரதோஷ விழா.

மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரள்யநாத சிவன் கோவிலில் வைகாசி வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது.

இதில் கோவில் முன்பு உள்ள நந்திக்கு பால் தயிர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் பிரகாரத்தில் சாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பக்தர்கள் சிவன் பாடல்களைப் பாடி வந்தனர். பின்பு தீபாராதனை காட்டப்பட்டது பிரதோஷ விழாவில் சோழவந்தான் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை சோழவந்தான் தொழிலதிபர் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் எம் மணி முத்தையா வள்ளிமயில் மற்றும் சோழவந்தான் நகர் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர். அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார். செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News