சோழவந்தானில் சுபாஷ் சந்திர போஸை மறந்த அரசியல் கட்சியினர்..!
சமுதாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அரசியல் செய்ய சுபாஷ் சந்திர போஸ் தேவையில்லை என்று நினைத்துவிட்டனர்;
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள நேதாஜிசுபாஸ் சந்திர போஸ் சிலை
சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை மறந்த அரசியல் கட்சியினர் செயல் குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திருஉருவச் சிலை பேருந்து நிலையம் அருகே உள்ளது. மூக்கையா தேவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் சிலைகளுக்கு மத்தியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது.
கடந்த காலங்களில், தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் ஜெயந்தி போன்ற நாட்களில் மூன்று சிலைகளுக்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருவார்கள்.குறிப்பாக, தேர்தல் காலங்களில் திரளான அரசியல் கட்சியினர் மரியாதை செய்வார்கள்.
இந்நிலையில் , சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால், சோழவந்தானில் உள்ள அவரது , திரு உருவ.சிலைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் மாலை அணிவிக்கவில்லை. இது சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை உதாசீனம் செய்வது போல் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறுவயது முதலே விவேகானந்தர் போன்றவர்களின் ஆன்மீக கருத்துகளை உள்வாங்கி வளர்ந்தவர் போஸ். கல்லூரியில் இளங்கலை பட்டத்தை பயின்றார்.1919 -ல் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க ஜ.சி.எஸ் தேர்வுக்காக லண்டன் சென்று கல்வி கற்று திரும்பினார். 1919 -ல் நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் இவரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட செய்தது.
இந்திய நாட்டுக்கான விடுதலைக்காக இவர் வியன்னா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து, கங்கேரி, இத்தாலி, ஜேர்மனி, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு இவர் பயணம் செய்தார். தங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலேயர் களிடம் வேலை செய்ய கூடாது என கருதி தனது பதவியை ராஜினாமா செய்த இவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். சி ,ஆர் தாஸ் என்பவரை தனது அரசியல் குருவாக கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். காந்தி போன்ற தலைவர்களின் அமைதி உடன்படிக்கைகளில் இவருக்கு உடன்பாடு இருக்கவில்லை.
இதனை தொடர்ந்து 1941 உலகப்போர் நடந்த காலகட்டம் அது இந்தியாவின் சுதந்திரத்துக்காக இவர் ஜேர்மனியின் "ஹிட்லர்" போன்ற தலைவர்களையும் சந்தித்து பேசிஆதரவையும் பெற்றார்.1944 இல் பர்மாவில் இருந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை இவர் எதிர்த்தார். இவ்வாறு அவர் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்திய ராணுவத்தை முதலாவது தொடங்கியவர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தக்காரர். சமுதாய அமைப்புகளும் தாங்கள் அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் தேவையில்லை என்று நினைத்தது போல் அவரது தியாகத்தை மறந்து விட்டனர்.
இனி வரும் காலங்களில், அரசு நிர்வாகத்தின் மூலம் உரிய மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செய்யப்பட வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்..