மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-01-19 11:26 GMT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த  போலீஸ்காரர் மகேந்திரன்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள  கச்சைகட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையில், பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஜீவிதன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு இவரது வீட்டில் வயரிங் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக

மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது உயிரிழந்தார். இது தொடர்பாக, வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News