விவேகானந்தா கல்லூரியில் மாணவர் களுக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக் கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது;

Update: 2023-08-25 13:15 GMT

திருவேடகம் விவேகானந்தா திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் நடந்த கருத்தரங்கம்

திருவேடகம் விவேகானந்தா திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’  கருத்தரங்கம் நடைபெற்றது. 

மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், கலைடாஸ்கோப் (Kaleidoscope) பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான ‘வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை வகித்தார்.கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்வில், சு.முத்தையா (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை) ‘தமிழ்த்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.அசோக்குமார் (உதவிப் பேராசிரியர், பொருளாதரத்துறை) ‘பொருளாதரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும்.

வீ.முருகன் (உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை) ‘வரலாற்றுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் க.செல்லப்பாண்டியன் (உதவிப்பேராசிரியர், வணிகவியல்துறை) ‘வணிகவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும்,

சி.வேல்முருகன் (உதவிப்பேராசிரியர், கணிதத்துறை) ‘கணிதத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் சு.கணேசன் (உதவிப்பேராசிரியர், இயற்பியல்துறை) ‘இயற்பியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும்

முனைவர் க.இராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை) ‘வேதியியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் த.செல்லத்துரை (உதவிப்பேராசிரியர், தாவரவியல்துறை) ‘தாவரவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும்,

முனைவர் ம.பவுன்ராஜ் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை)  ‘விலங்கியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், ச.இரஞ்சித்குமார் (உதவிப்பேராசிரியர், கணினிஅறிவியல்துறை) ‘கணினிஅறிவியல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்விற்கு அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்றார். ஆங்கிலத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் நன்றி கூறினார்.  சமஸ்கிருதத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் தொகுத்தளித்தார். இந்நிகழ்விற்கு ஆலோசகராக  முனைவர் க.கார்த்திகேயன் (கல்லூரி துணைமுதல்வர்) மற்றும் முனைவர் ஜெயசங்கர் (புலமுதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்) ஆகியோர் செயல்பட்டனர்.

Tags:    

Similar News