மதுரை கோயில்களில் சோமவாரப் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் வழிபாடு..!
மதுரை மாவட்டத்த்தில் கோயில்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.;
மதுரை:
மதுரை மாவட்ட கோயில்களில், சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவில், மதுரை இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், சிம்மக்கல் பழைய சொக்கநாதர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், துவரிமான் மீனாட்சி சுந்தரர் கோவில், சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி திருக்கோவில், தென்கரி மூலநாதர் சுவாமி ஆகிய கோவில்களில் ,சோமார பிரதோஷ விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள மற்றும் சுவாமி ,அம்பாளுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . இதை அடுத்து ,சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வளர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சிவன் அம்பாளை வழிபட்டனர் இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன சோழவந்தான் சிவன் ஆலயத்தில் நந்திகேஸ்வரர் நரசிம்மர் சனீஸ் லிங்கம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன இதற்கான ஏற்பாடுகளை,
தொழில் அதிபர் எம் .வி. எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளிமயில் , கோவில் நிர்வாக அதிகாரி இளமதி கணக்கர் சி பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.