வாடிப்பட்டியில் அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி
வாடிப்பட்டியில் அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.;
மதுரை மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாடிப்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசின் 100 நாட்கள் திட்டங்கள் சாதனைகள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் அரசின் திட்டங்களை கண்டுகளித்தனர்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.ஆர்.சரஸ்வதி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த புகைப்படக் கண்காட்சியில், அரசின் நலத்திட்டங்கள், அதை பெறும் வழிமுறைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான விபரங்கள், அதை தடுக்கும் முறைகள், விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கான ஏற்பாடுகளை, மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வா. விநோத், ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.