நல வாரிய நியமனம் தொடர்பாக அமைச்சரிடம் மனு அளித்த நிர்வாகிகள்
பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு புகார் மனு கொடுத்தார்;
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், நிதி துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் புதிரை வண்ணார் நல வாரியம் சம்பந்தமாக தமிழக அரசு 2023 24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், புதிரை வண்ணார் சமூக மக்கள் கல்வி பொருளாதாரம் சமூக முன்னேற்றத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அது சம்பந்தமாகவும் நல வாரியத்தில் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ள அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனத்தில் ஒரு சில குளறுபடிகள் இருப்பதாக பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு புகார் மனு கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்வதாக உறுதி கூறினார். இந்நிகழ்வில், பொதுச்செயலாளர் முருகேசன், மதுரை மாவட்ட செயலாளர் தங்கமணி, விருதுநகர் மாவட்ட செயலாளர் இன்பராஜ், தென்காசி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தேனி ஒன்றிய செயலாளர் சதிஷ் ஆகியோர் வந்திருந்தனர்.