சீர் மரப்பினருக்கு ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்க கோரி அமைச்சரிடம் மனு
சீர்மரபினர் நலச் சங்கத்தினர் சந்தித்து சீர் மரபினருக்கு தமிழகத்தில் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை;
சீர் மரபினருக்கு ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க கோரி அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மதுரை,சோழவந்தான் அருகே, மேலக்கால் கிராமத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயல் வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர் .
கூட்டம் முடிந்து வெளியில் வந்த அமைச்சர் மூர்த்தியிடம், சீர்மரபினர் நலச் சங்கத்தினர் சந்தித்து சீர் மரபினருக்கு தமிழகத்தில் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி இது குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்து சென்றார். இதில், சீர்மரபினர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் துணைப் பொதுச் செயலாளர் காசி மற்றும் சங்கத்தினர் உடன் இருந்தனர்.