பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது;
நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, வளையப்பட்டி மணியார் தெருவை சேர்ந்த சாந்தி என்பவர், நியாயவிலைக் கடைக்கு சென்று மத்திய அரசு வழங்கும் பொருட்கள் வழங்க கோரிக்கை வைத்தார். அப்போது உன்னுடைய குடும்ப அட்டைக்கு பொருட்கள் வழங்கி விட்டதாகவும் விற்பனையாளர் தெரிவித்தார்.
நான் பொருட்கள் வாங்கவில்லை என்று கூறிய பெண் சாந்தியை 5.9.2021 அன்று பணியில் இருந்த நியாயவிலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் சுந்தரம், மேற்பார்வையாளர் இருளப்பன், கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன் , உள்ளிட்டவர்கள் அவரை தகாத வார்த்தைகளில் திட்டிய தாக்கினர். இதுகுறித்து சாந்தி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.உடனடியாக மூன்று நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மூவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார்.