மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பெரியார் பிறந்த தின விழா
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், பெரியார் 145- வது பிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது.
திராவிடர் கழகம்... சார்பில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம், சந்தை வாசல், தமிழன் லாரி எடை நிலையம் ஆகிய இடங்களில் நடந்த விழாவிற்கு, மாவட்ட காப்பாளர் சு.தனபாலன் தலைமை வகித்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.
உசிலை மாவட்டத் தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.
இதில், தங்கராஜ், அர்ச்சுதன், கண்ணன்,சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறிவாளர்கழகம் மாவட்ட துணை தலைவர் கவிஞர் பொன். கலை தாசன் நன்றி கூறினார்.
தி.மு.க சார்பாக போடிநாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.
அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அதியர்பிரிய ன் வரவேற்றார். கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ ம் மாலை அணிவித்தார். இதில், முரளி, வீரன், அகத்தியன், முத்து சிவா, ஸ்ரீராம், சிவகுமார், சந்தன மாரி, பழனியம் மாள், பாண்டியம் மாள், கிருஷ்ணா மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், சரவணன் நன்றி கூறினார்.