சோழவந்தான் அருகே சாலை மேம்பாட்டிற்காக கண்மாய் கரை உடைக்க மக்கள் எதிர்ப்பு
சோழவந்தான் அருகே சாலை மேம்பாட்டிற்காக கண்மாய் கரை உடைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.;
சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சியில் கண்மாய் கரையை உடைத்து ரோட்டுக்கு கரை அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை நெடுஞ்சாலைத் துறையினர் நேரில் பார்வையிட்டு பணிகளை நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்திலிருந்து கட்டப் புலி நான்கு வழிச்சாலை வரை கிராமச் சாலை உள்ளது. இங்கு நபார்டு வங்கி மூலமாக கிராமச் சாலை பணிகள் ஒப்பந்தக்காரர் மூலமாக நடைபெற்று வருகிறது. தார் சாலை பணிகள் முடிந்து ரோட்டின் இரு புறமும் மண்மேடு அமைக்கும் பணி நடந்து வருகிறத.
இந்த வேலைக்காக ரோட்டிற்கு இருபுறமும் உள்ள கண்மாயில் கரையை உடைத்து ரோட்டிற்கு ஓரமாக கரை போட்டதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இடமும் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து கண்மாய்க்ரை பகுதியை பார்வையிட்டனர். அங்கு தார் சாலையின் இருபுறமும் கண்மாய் கரை பகுதியிலிருந்து மண் அள்ளி வேலை பார்த்தது தெரியவந்து உடனடியாக பணிகளை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறும் பொழுது தேனூர் கண்மாயிலிருந்து சுமார் 1000 ஏக்கர் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்மாய் சுமார் 300 ஏக்கருக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க கூடிய கொள்ளளவு இருந்ததாகவும் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேனூர் கண்மாய் சுருங்கிவிட்டது மேலும், தற்போது தார் சாலை அமைப்பதற்காககண்மாய் கரையை உடைத்து ரோடு போடுவதற்கு கரை அமைத்து உள்ளனர் . இதனை அறிந்த,கிராம மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். மேலும், அமைச்சர் மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தோம்.
இதன் பேரில், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை கிராம நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்திருந்து கண்மாய் கரை உடைத்து மண்ணை எடுத்து இருப்பதை கண்டறிந்து தற்போது, வேலையை நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர் என்று கூறினார்.
ஏற்கனவே, நீர் நிலைகளில் கோடை காலம் காரணமாக நீரின் அளவு குறைந்து வரும் நிலையில் ஒரு சில சுயநலவாதிகளின் இது போன்ற செயல்களால் நீர் பிடிப்பு பகுதிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.