வாடிப்பட்டியில் 'தலை காய' அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை..!

Update: 2024-07-08 10:57 GMT

வாடிப்பட்டியில், ஓய்வு ஊதியூர் நலச் சங்க கூட்டம்.

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாடிப்பட்டி: 

மதுரை,வாடிப்பட்டி அரசு மருத்துவமனை யில் தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று, ஓய்வுதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்ட கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக 8-வது வட்டக் கிளை பேரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வட்டக் கிளைத் தலைவர் மணி தலைமை தாங்கினார்.

வட்ட இணைச் செயலாளர்கள் ஆறுமுகம்,சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தினை, மாவட்ட இணைச்செயலாளர் பானு தொடக்கி வைத்தார்.வேலை அறிக்கையை செயலாளர் வேல் மயில் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொரு ளாளர் எஸ்.ஏ. பாண்டியம்மாள் வாசித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் வாழ்த்து வழங்கினார்.

மாவட்டத் தலைவர் முனைவர் கிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், தமிழக முதல்வர் அறிவித்தது போல் ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக பத்து சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகைளை கலைந்து காசில்லா மருத்துவ சிகிச்சை வழங்க உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவ செலவு தொகையை கருவூலக கணக்குத் துறை உடன் ஒப்புதல் வழங்க வேண்டும்.

வாடிப்பட்டி தாலுகாவில் மகளிர் கலை கல்லூரி அமைக்க வேண்டும், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், செயற்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News