வாடிப்பட்டியில் ஆக.7-ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி: அமைச்சர்
திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது;
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வாடிப்பட்டியில் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலையில், அமைதி பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தமது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்:
அதன் விவரம்: திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக வாடிப்பட்டியில் நாளை 07.08.2023 திங்கள் கிழமை காலை 9மணிக்கு அமைதி பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடைபெறுகிறது. வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன், மாவட்ட துணை செயலாளர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் முன்னிலையிலும் வாடிப்பட்டி பழைய நீதிமன்ற வளாகம் அருகில் இருந்து அமைதி பேரணி துவங்கி ,வாடிப்பட்டி அண்ணா பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து , பேரறிஞர் அண்ணா சிலை முன்பாக அமைக்கப்பட்டுள்ள தலைவர் கருணாநிதியின், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. பின்னர், ஏழை எளியோர் மற்றும் நலிந்த கழகத்தினருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டுமென, வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.