மதுரை கோயில்களில் தேய்பிறை பஞ்சமி விழா..!

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.

Update: 2024-06-26 11:55 GMT

தேய்பிறை பஞ்சமி மதுரை சௌபாக்கியவனார்  ஆலயத்தில் வராகி சிறப்பு பூஜை

மதுரை கோயில்களில் தேய்பிறை பஞ்சமி விழா 

மதுரை:

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் மாதந்தோறும், வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமிகளில் வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

வராகி அம்மனுக்கு, பக்தர்களால் மஞ்சள் பொடி, சந்தனம் ,பன்னீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, மதுரை தாசில்தார் நகர் சித்திவிநாயகர் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் அர்ச்சகர் குப்புலால் தலைமையில் நடைபெற்றது. இதேபோல, மதுரை அண்ணா நகர் யானை குழாய் ,முத்துமாரியம்மன் ஆலயத்தில் வராய அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடந்தன. 

அபிஷேகங்களை, பட்டர் மணிகண்டன் தலைமையில் வேதியர்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில்  நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்

Tags:    

Similar News