சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா
சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;
சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் ஆலய பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகநாராயணப் பெருமாள் ஆலய பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கோயில் யாகசாலை அரங்கில் எழுந்தருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் சுவாமிக்கு வரதராஜ பண்டிட் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை செய்தார். கருட உருவம் பொறித்த கொடி நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ரகுராம் பட்டர் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
11 நாள் விழாவில், தினமும் இரவு சுவாமி அன்ன வாகனம், சிம்மம், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 7 திருக்கல்யாணம், ஏப்ரல் 11 விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.