அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2024-04-17 08:05 GMT

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ஸ்ரீசுதா முருகன். இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் அலங்காநல்லூரில் இருந்து, அச்சம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த  4 பவுன் தாலி செயின் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக, அலங்காநல்லூர் போலீசில் ஊராட்சி மன்றத் தலைவி ஸ்ரீசுதா முருகன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றவர்களை வலை வீசி தேடி வருவதுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறிப்பு நிகழ்வால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News