மதுரை அருகே ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க.வினர் அன்னதானம்

மதுரை அருகே ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.;

Update: 2024-03-05 09:28 GMT

மதுரை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பகுதியில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பொது மக்களுக்கு அன்னதானத்தை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்திற்கு நிதி தரவில்லை என கூறும் தமிழக அரசு மத்திய அரசிடம் புலி போல் பாய வேண்டும் ஆனால், பூனை போல் பதுங்குகிறது என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில்எல்லா கட்சி தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வருவார்கள். அதே போல் தான் பிரதமரும் தமிழகத்திற்கு வந்துள்ளார்.

அது முக்கியமான செய்தி ஒன்றும் இல்லை. பேரிடர் காலத்தில் மற்ற மாநிலத்திற்கு நேரில் செல்லும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு பேரிடர் காலத்திற்கு வரவில்லை. நேரில் வந்திருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், வரவில்லை. இதற்கு தக்க பதிலடியாக பிரதமர் மோடிக்கு தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள் தோற் கடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கான ஏற்பாடுகளை, மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். இதில் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி .கருப்பையா, மாணிக்கம், மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட அதிமுகவினர் பொதுமக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், பொதும்பு ரகு நன்றி கூறினார்.

Tags:    

Similar News