சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா: திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.

Update: 2024-04-15 08:11 GMT

 ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சோழவந்தான்:

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா 7ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும்பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்குரதவீதியில் வலம் வந்து கோவில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை,பெண் அழைப்பு,மாலை மாற்றும் வைபவம் ,ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் சாரதி மற்றும் பட்டர்கள் யாகவேள்விநடத்தினர் இதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது திருமாங்கல்யம் மற்றும் பிரசாதம் உள்ள தாம்பூலப்பை மற்றும் அன்னதானம் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இரவு வண்ண கோரதத்தில் திருமணக்கோலத்தில்மின் அலங்காரத்தில் பவனி வருவார். திருக்கல்யாண நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் எஸ் எஸ் ராஜாங்கம் அறங்காவலர்கள் எம் எஸ் பாண்டியன் பெரியசாமி ஆண்டியப்பன் மங்கையர்க்கரசிசெயல் அலுவலர் சுதா கோவில் பணியாளர் முரளிதரன் உபயதாரர் சௌந்தரிஅம்மாள், லலிதாசங்கரன், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி ஒரு கண்ணோட்டம் 

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் 7ம் நாள், திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள், சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் நான்கு ரதவீதியில் வலம் வந்து கோவில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் மற்றும் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் அர்ச்சகர் சாரதி மற்றும் பட்டர்கள் யாகவேள்வி நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமாங்கல்யம் மற்றும் பிரசாதம் உள்ள தாம்பூலப்பை மற்றும் அன்னதானம் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இரவு, வண்ண கோரதத்தில் திருமணக்கோலத்தில், மின் அலங்காரத்தில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கல்யாண நிகழ்ச்சியில், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் எஸ்.எஸ். ராஜாங்கம், அறங்காவலர்கள் எம்.எஸ். பாண்டியன், பெரியசாமி, ஆண்டியப்பன், மங்கையர்க்கரசி, செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன், உபயதாரர்கள் சௌந்தரிஅம்மாள், லலிதாசங்கரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் கூட்டம் அலைபாய்ந்த இந்த திருவிழாவில், சுவாமியின் அருள் பெற பக்தர்கள் திரண்டிருந்தனர்.

Similar News