மதுரை அருகே சோழவந்தானில் திறக்கப்பட்ட, தினசரி சந்தையின் புதிய கட்டிடங்கள்
தமிழக முதலமைச்சர் மதுரையை மையமாகக் கொண்டு 25 கி.மீ சுற்றளவில் பல்வேறு திட்டங்கள் நிரைவேற்ற ஆலோசனை நடத்தியுள்ளார்.
மதுரை அருகே சோழவந்தான் பேரூராட்சி தினசரி சந்தை கடைகள் புதிதாக கட்டுவதற்கு மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டம் விதி 150 லட்சம் மதிப்பீட்டில்66 கடைகள் தினசரி சந்தை வணிக வளாகம் கட்டப்பட்டது.இதை திறப்பதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இதை, வெங்கடேசன் எம்எல்ஏ நேரடியாக தலையிட்டு சுமூகமாக முடித்து வைத்தார்.
இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார்.சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி உதவிஇயக்குனர் சேதுராமன் வரவேற்றார்.வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி புதிய தினசரி சந்தை வணிக வளாகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பயனாளிகளுக்கு கடை அனுமதி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ப. மூர்த்தி பேசியதாவது: 2006 - 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, மின்சார தட்டுப்பாட்டை போக்க துணை மின் நிலையம் கொண்டு வந்தேன்.சோழவந்தான் தொகுதியின் அனைத்து ரோடு ஆகல படுத்தி பொதுமக்கள் வசதியாக செல்ல போக்குவரத்து நெரிசலை குறைத்தேன். தென்கரை, முள்ளிப்பள்ளம் மயானத்துக்கு சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.
அங்கு இரண்டு பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டது. கலைஞர் அரசு. குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவிலில், ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தோம். இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க வசதி செய்து கொடுத்தோம்.இப்படி, நான் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பொழுது சோழவந்தான் தொகுதிக்கு செய்த திட்டங்கள் மணிக்கணக்கில் சொல்லலாம் இதுதான் கலைஞர்அரசு.
ஆனால், பத்தாண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய திட்டங்கள் செய்யவில்லை. நான் ,கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சோழவந்தான் தொகுதி சொந்தத் தொகுதியாக நினைத்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுப்பேன்.கலைஞருக்கு பின்னால், அவர் மகன் தளபதி தமிழக முதலமைச்சர், மதுரையை மையமாகக் கொண்டு 25 கிலோ மீட்டர் சுற்றளவில் பல்வேறு திட்டங்கள் செய்வதற்கு முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதை, மாவட்ட ஆட்சித் தலைவரும், வெங்கடேசன் எம்எல்ஏ வும் வழிமொழிந்தனர்.செயல் அலுவலர் ஜீலான்பானு நன்றி கூறினார். இதில் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய துணை பெருந்தலைவர் தனலட்சுமி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், தனபாலன்,வசந்தகோகிலா, சரவணன், ரேகா வீரபாண்டி, கார்த்திகா ஞானசேகரன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அய்யப்பன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், ஸ்ரீதர், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அயூப்புகான், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்ற பெரிய கருப்பன்,முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா, சமூக ஆர்வலர் சோழராஜன்,வெற்றிச்செல்வன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி பாலசுந்தர்,இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.