சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலயத்தில் நவராத்ரி கலைவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலயத்தில் நவராத்ரி கலைவிழா நடைபெற்றது.;

Update: 2023-10-24 09:33 GMT

சோழவந்தான், ஜெனகை மாரியமமன் ஆலயத்தில், நவராத்ரி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் நவராத்திரி விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி திருக்கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரி நிறைவு விழாவில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பிரணவ் நடன நாட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளமதி துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட நடன நாட்டிய பள்ளி மாணவிகள் கௌன பாலமுருகன் ‌ஆலோசனைப்படி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை ஆலய பணியாளர்கள் கணக்கர் பூபதி, வசந்த் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.

மதுரை நகரில், அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர, தெப்பக்குளம் முக்தீஸ்வர, பழைய சொக்கநாதர், மதுரை அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார்,  மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்களில், நவராத்திரியையொட்டி,  அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி மாரியம்மன் கோயில், தினசரி வித விதமான அலங்காரங்கள் நடைபெற்றது.

Tags:    

Similar News