மதுரை அருகே கோயிலில் நவராத்திரி நிறைவு விழா!
மதுரை அருகே கோயிலில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.;
மதுரை அருகே கோயிலில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.
நவராத்திரி நிறைவு விழா: மதுரை ஊமச்சிகுளம் அருகே மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம்:
அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி விரதம் இருந்து வழிபடுவதால், நவராத்திரி விழா எனப்படுகிறது. இந்த விழா கடந்த 3ம்தேதி துவங்கி சனிக்கிழமை அன்று நவராத்திரி நிறைவு விழா நடைப்பெற்று முடிந்தது.
இதில், மதுரை அடுத்த ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில், நவராத்திரி திருவிழாவும் முக்கியமானதாகும். இந்த திருவிழா ஆண்டுதோறும், 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி,இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது.
இதையொட்டி, கடந்த 9 நாட்கள் கோவிலுக்குள் சந்தன மாரியம்மனுக்குதினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. நவராத்திரி நிறைவு விழாவான நேற்று முன்தினம் (ஆக.12) திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் ஸ்ரீமகிஷாசூரமர்த்தினி அம்மன் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வழி நெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே அம்மனை வரவேற்று வழிபட்டனர். ரதத்தில் அமர்ந்தபடி அம்மன் வில் அம்பு எய்தல் மண்டபத்தை 3 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் அம்மன் புறப்பட்டு இருப்பிடத்திற்கு வந்தடைந்தார்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அம்மனுக்கு நித்திய பூஜை, பால் பன்னீர் திரவியம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் சந்தன மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து , சந்தானம் மாரியம்மன் உற்சவம் ரதத்தில் அலங்காரம் செய்து கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் வளாகத்தில், ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு ,கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி வைத்து காட்சி படுத்தி இருந்தனர். மேற்கு ஒன்றிய துணைச் சேர்மன் கார்த்திக்ராஜா, பசு மாடு மற்றும் கன்றினை தானம் வழங்கினார். கோவிலில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.