சோழவந்தானில், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு..!
மதுரை அருகே சோழவந்தான் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
சோழவந்தான்:
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபால், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சோழவந்தான், முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
இந்த நிகழ்ச்சியில், மாநில தொழிலாளர் பாசறை செயலாளர் இருளாண்டி, ஒருங்கிணைந்த சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி, ஒருங்கிணைந்த சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதி செயலாளர் செல்லப்பாண்டி, சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதி தலைவர் முத்தீஸ்வரன், சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதி துணைச் செயலாளர் சந்திரசேகர், சோழவந்தான் நகர செயலாளர் கார்த்திகேயன், சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி வாக்கு சேகரிக்கும் பகுதிகளில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் அமோக ஆதரவளித்தனர் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நாம் தமிழர் கட்சிக்கு தான் எங்கள் ஓட்டு சீமான் தான் அடுத்து தமிழகத்தை ஆள வேண்டும் என்று கூறினார்கள்.